திருப்பெருந்துறையில் "SOS பிள்ளைகள் கிராமம்" தின நிகழ்வு

(சுரேந்திக்கா)  
மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் SOS பாலர் பாடசாலையில்  "SOS பிள்ளைகள் கிராமம்" தினத்தினை நினைவுகூரும் முகமாக நிகழ்வு பாலர் பாடசாலை அதிபர் திருமதி மரியதாஸ் திருமலர்செல்வி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

 "SOS பிள்ளைகள் கிராமம்" ஸ்தாபகர் கலாநிதி ஹமன்கிரமினர் அவர்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ள பாலர் பாடசாலையினைப்போல் முதலாவது பாடசாலையினை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  தாய் தந்தையரை இழந்த பிள்ளைகளுக்காக ஒஸ்ரியாவில் 1941ம் ஆண்டில் அமைத்தார். தற்போது 132 நாடுகளில் 45000 பிள்ளைகளுக்கு வதிவிடங்களையும் பராமரிப்பு சேவையினையும் வழங்கப்பட்டுவருகின்றது.  இதில் இலங்கையும் ஒன்றாகும்.

கலாநிதி ஹமன்கிரமினர் 1986ம் ஆண்டில் காலமானார். அன்றலிருந்து இந்நிறுவனம் 1987ம் ஆண்டு தொடக்கம்  "SOS பிள்ளைகள் கிராமம்"  நினைவு தினத்தை கொண்டாட முடிவுசெய்தது.

இந் நிகழ்வின்போது SOS கிழக்கு சிரேஸ்ட இணைப்பாளர் எஸ் ஜெயபிரகாஸ்,  பாடசாலை அதிபர்  திரு.தர்மசீலன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.