கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றையடுத்து குறித்த வீட்டை சுற்றி வளைத்து சோதனையிட்ட போது அங்கு புதையல் தோண்ட முற்பட்ட பெண் ஒருவர் உட்பட 7 பேரை கைது செய்ததுடன் பலியிட கொண்டுவரப்பட்ட ஆடு ஒன்றும் அலவாங்கு,சவல்கள், சுத்தியல் மற்றும் பூஜைப்பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பதுளை மற்றும் பியகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதையல் தோண்ட முற்பட்ட பெண் உட்பட 7 பேர் கைது! பலியிட கொண்டுவரப்பட்ட ஆடு ஒன்றும் மீட்பு.
திருகோணமலை - கந்தளாய் ரஜஎல பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை வீடு ஒன்றில் புதையல் தோண்ட முற்பட்ட பெண் ஒருவர் உட்பட 7 பேரை கைது செய்துள்ளதுடன் பலியிட கொண்டு செல்லப்பட்ட ஆடு ஒன்றையும் மீட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.













