ஐக்கிய மக்கள் சமுக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் புலமைப் பரிசில் பரிட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு நாளை இலவச கல்வி கருத்தரங்கு.

(உ.உதயகாந்த்)

மட்டக்களப்பு திருசெந்தூரில் இயங்கிவரும் ஐக்கிய மக்கள் சமுக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை 2013.08.19 திங்கட்கிழமை  இவ் ஆண்டு  புலமைப் பரிசில் பரிட்சைக்கு தோற்றவிருக்கும் நாவலடி தொடக்கம் மஞ்சன்தொடுவாய் வரையிலான மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி கருத்தரங்கு ஒன்றினை  இலங்கை வங்கியின் அனுசரனையுடனும் 
மட்டக்களப்பு செய்திகளின் (Battinews.com) ஊடக அனுசரணையுடனும் மிகவும் பிரமாண்டமான முறையில் மட்/ கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலய மண்டபத்தில் காலை 8.00 மணி தொடக்கம் பி.ப 12.30 மணி வரைக்கும் நடாத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் இலவச கல்வி கருத்தரங்கிற்கு வளவாளராக கல்முனை வலயத்தின் பிரபல ஆசான் சீ.ஜெயானந்தன் கலந்து கொள்வதுடன், சர்வமத தலைவர்களினால் மாணவர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

மாணவர்களுக்கு அனைத்து விதமான  ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளதாகவும் , மாணவர்களும் அவர்களுக்கு பொறுப்பான ஆசிரியர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள நாளாக நாளைய தினத்தினை அமைத்து கொடுக்குமாறு சங்கத்தின் ஏற்பாட்டாளர்கள் அறியத்தருகின்றார்கள்.

இத் தகவலினை அறிபவர்கள் ஏனைய மாணவர்களுக்கும் அறிவித்து அவர்களையும் இணைந்து கொள்ள வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.