(உ.உதயகாந்த்)
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தற்போதைய ஜனாதிபதி ஆலோசகரும், மாகாண சபை உறுப்பினருமாகிய சி.சந்திரகாந்தன் அவர்களின் 38 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு கடந்த 18.08.2013 ஆம் திகதி மட்/ கல்குடா வலயத்தில் இவ் வருடம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் நன்மை கருதி முன்னோடி பயிற்சி கருத்தரங்கு கடந்த 18.08.2013 ஆம் திகதி மட்/ வாழைச்சேனை குகனேசன் மண்டபத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இக் கருத்தரங்கு பிரபல புலமைப்பரிசில் ஆசான் ஜெயகாந்தனினால் நடாத்தப்பட்டதுடன், இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வலைய கல்வி பணிப்பாளர் சிறி கிருஸ்ணராஜா அவர்களும் , கௌரவ அதிதிகளாக த.ம.வி.பு கட்சியின் பிரதி தலைவர் யோகவேல் , செயற்குழு உறுப்பினர் திருமதி செல்வி மனோகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்கள்.












