(உ.உதயகாந்த்)
அபிவிருத்தி கண்டு வரும் அழகிய மட்டக்களப்பு மாவட்டத்தினை மேலும் அபிவிருத்தி கண்டு அழகு பெற வழி சமைக்குமுகமாக முன்னாள் முதல்வரும் , ஜனாதிபதி ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் முன் மொழிவின் பேரில் கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் இரு கிராமங்களின் அபிவிருத்திக்காக தலா இருநூறு இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களாகிய பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவின் முனைக்காடு கிராமமும் , கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பேத்தாழை கிராமமும் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு , இவ் இரு கிராமங்களிற்கும் வாழ்வாதார அபிவிருத்தி, மைதானம் , வீதிகள், பாடசாலைகள் புணரமைப்பு, கலாசார அபிவிருத்தி உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் இன் நிதி ஒதுக்கீட்ட்டின் மூலமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் தமது செவ்வியில் தெரிவித்தார்.

















