நீண்டகாலமாக மட்டக்களப்புக்கும் அம்பாறை மாவட்டத்துக்கும் இடையில் நிலவிவரும் எல்லை பிரச்சினைகள் காரணமாக பொதுமக்கள் நிர்வாக ரீதியில் பல கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர். அந்த வகையில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் எல்லைப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக எல்லைப்பகுதியில் அம்பாறை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்ததன் காரணமாக நிர்வாகம் மேற்கொள்ளும் அதிகாரிகளும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிவந்தனர்.
இது தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதிலும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையே இருந்துவந்தது.
மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் என்பனவற்றில் இது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே இருந்துவந்தது.
இந்த நிலையில் இது தொடர்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் இரு மாவட்டங்களின் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதுடன் எல்லைப்பகுதிகளையும் பார்வையிட்டனர்.
இரு மாவட்டங்களுக்கும் இடையில் காணப்படும் எல்லைப்பிரச்சினையை தீர்த்து இரு மாவட்டங்களினதும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இரு மாவட்ட மக்களும் இந்த எல்லைப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை தீர்ப்பதன் மூலம் இரு மாவட்ட மக்களும் நன்மையடைவர் எனவும் அவர் தெரிவித்தார்.