உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு சித்திரப் போட்டி.

"பரிகல்பன" அகில இலங்கை சிறுவர் சித்திரப் போட்டி ஒன்றினை நன்நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப் போட்டி தரம் 1 முதல் தரம் 13 வரையிலான மாணவர்கள் பங்குபெறமுடியும்.

1.இதில் பாலர் பிரிவில் தரம்-1 தொடக்கம் தரம்-5 வரை  "சிறுவனாக நானும் எனது தேசமும்" எனும் தலைப்பில் இச் சித்திரப் போட்டி (ஆக்கம்) இடம்பெறவுள்ளது.

2.கணிஷ்ட பிரிவில் தரம்-6 தொடக்கம் தரம்-10 "நாம் காணும் நாளைய இலங்கை"  எனும் தலைப்பில் இச் சித்திரப் போட்டி(ஆக்கம்) இடம்பெறவுள்ளது.

3.சிரேஷ்ட பிரிவில் தரம்-11 தொடக்கம் தரம்-13 வரை "சிறுவர்களை எமது வலு நாளைய உலகின் அபிவிருத்தியாகும்" எனும் தலைப்பிலும் ஆக்கங்கள் இடம்பெறவுள்ளது.

இம் மூன்று பிரிவுகளாக இடம்பெறும். அனைத்து ஆக்கங்களும் 2013.08.30ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பிவைத்தல் வேன்டும்.

இதன் மேலதிக விபரங்கள் பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.