சம்மாந்துறையில் மனித உரிமை விழிப்புணர்வு கருத்தரங்கு


மனித அபிவிருத்தி தாபனம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள இளைஞர் கழகங்களின் உறுப்பினர்களுக்கு மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் சிறுவர்,பெண்கள் உரிமை சம்மந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கினை நேற்று சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தியது. 

 இந்நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் எம்.எச்.எம் பைசல் அமின் அவர்களின் எற்பாட்டில் மனித அபிவிருத்தி தாபனத்தின் உதவி இணைப்பாளர் எம்.ஜ. றியால் தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு வளவாளராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய மேற்பார்வை இணைப்பாளர் லத்தீப் இஸ்ஸடீன் அவர்கள் கலந்து கொண்டு மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், சிறுவர் உரிமைகள்,பெண்கள் உரிமைகள்  மற்றும் இளைஞர் யுவதிகளின் கடமைகள் பொறுப்புக்கள் பற்றியும் விளக்கவுரையை வளங்கினார்.
இக்கருத்தருங்குக்கு சம்மாந்துறை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மனித அபிவிருத்தி தாபனத்தின் தொண்டர்கள் உட்பட சம்மாந்துறை பிரதேச செயலக இளைஞர் கழக அங்கத்தவர்கள் 40 பேர் கலந்து கொண்டனர். 







(வி.ரி.சகாதேவராஜா)