ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோசவத்தின் இரண்டாம் நாள் திருவிழா நிகழ்வுகள்

(உ.உதயகாந்த்)

கிழக்கிலங்கையின் மீன் பாடும் தேன் நாடாம் மட்டு மாநகரின் திருச்செந்தூர் பதிதனில் கோயில் கொண்டு அடியார்களுக்கெல்லாம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஈழத்து திருச்செந்தூர் முருகப் பெருமானின்  ஆலயத்தின்   வருடாந்த மஹோசவத்  திருவிழா நிகழ்வானது 27.08.2013 திகதி திருக் கொடிற்யேற்றும் நிகழ்வுடன் ஆரம்பமாகி நேற்றைய தினம் இரண்டாம் நாள் திருவிழா உபயகாரர்களான கல்லடி உப்போடை பொதுமக்களினால் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.

திருவிழா பூஜைகளின் நிறைவில் சுவாமி உள்வீதி , வெளிவீதி ஆகியவற்றில் வலம்வரும்போது வானவேடிக்கை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன்,  கல்லடி விபுலானந்தா அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள்  இடம்பெற்றது.

ஈழத்து திருச்செந்தூர் முருகப் பெருமானின் திருவிழா நிகழ்வில் அதிகளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.