மட்டக்களப்பு திருசெந்தூரில் இயங்கி வரும் ஐக்கிய மக்கள் சமுக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்வாண்டு புலமைப் பரிசில் பரிட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு அண்மையில் மிகவும் பிரமாண்டமான முறையில் மட்/ கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலய மண்டபத்தில் காலை 8.30 மணி தொடக்கம் பி.ப 12.30 மணி வரைக்கும் சங்கத்தின் ஸ்தாபக தலைவர் திரு உ .உதயகாந்த் தலைமையில் நடைபெற்றது.
இவ் இலவச கல்வி கருத்தரங்கிற்கு வளவாளராக கல்முனை வலயத்தின் பிரபல ஆசான் சீ.ஜெயானந்தன் கலந்து கொண்டதுடன், சர்வமத தலைவர்களான சுவாமி வேதானந்தா ஆனந்தா , அருட்தந்தை ரஜீவன் , நிரோஜன் ஜீ ஆகிய அருளாளர்களினால் மாணவர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு அதிதிகளாக கிராம உத்தியோகத்தர்களான வேந்தன் நவஜீவிகா, பார்த்தீபன், சிவலிங்கம் ஆகியோரும் அதிபர்களான திருமதி.வேலாயுதம்பிள்ளை, உமாபரமேஸ்வரன் மற்றும் அறநெறி பாடசாலையின் தலைவர் ஞானசெல்வம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.













