(உ.உதயகாந்த்)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூர் கிராம மக்களின் பொருளாதார நிலமையினை பற்றியும் , இக் கிராமத்தின் பொருளாதார நிலையினை மேம்படுத்த தடையாக உள்ள காரணிகள் மற்றும் அரசினால் எவ்வாறான உதவிகள் மக்களுக்கு கிடைக்கின்றன , எவ்வாறான முறையில் பொருளாதாரத்தினை மேம்படுத்தலாம் என்பது பற்றியும் ஆராய்ந்து அறியுமுகமாக ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தின் தென் கொரியா பிரதிநிதி பேராசிரியர் கொங்க் சூலின் அவர்களும் செல்வி மிங்க் யங்க் கிம் , ஆசியா பவுண்டேசன் அதிகாரி சசிதரன் ஆகியோர் நேற்றைய தினம் 20.08.2013 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டு கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்கள்.
இக் கலந்துரையாடல் நிகழ்வானது கல்லடி வேலூர் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் கிராம உத்தியோகத்தர் T.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்றதுடன், கிராம மட்ட தலைவர்களும் இன் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.












