கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய திருவிழாவும், சித்திரத் தேர் வெள்ளோட்டமும்.

கிழக்கிலங்கையில் உள்ள கல்முனை மாநகரில் பல நூறு ஆண்டு காலமாக வள்ளி தேவயானை சமேதராக வீற்றிருந்து வேண்டுபவர்களுக்கு வேண்டுவன அருள் பாலித்து வரும் ஸ்ரீ முருகன், வரும் திவ்ய மங்கள விஜய வருடம் ஆவணித்திங்கள் 8ம் நாள் (24.08.2013) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஆவணித்திங்கள் 16ம் நாள் (01.09.2013) ஞாயிற்றுகிழமை சித்திரத் தேர் வெள்ளோட்டம் கல்முனை மாநகரை சுற்றி வலம்வருதலுடன், ஆவணித்திங்கள் 20ம் நாள் (05.09.2013) தீர்த்ததுடன் நிறைவு பெறும்.

கொடியேற்றம் : 24.08.2013

தேர் வெள்ளோட்டம் : 01.09.2013

தேரோட்டம் : 04.09.2013

தீர்த்தம் : 05.09.2013

அனைவரும் வருக. முருகன் அருள் பெறுக.