(உ.உதயகாந்த்)
கிழக்கிலங்கையின் மீன் பாடும் தேன் நாடாம் மட்டு மாநகரின் திருச்செந்தூர் பதிதனில் கோயில் கொண்டு அடியார்களுக்கெல்லாம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோசவத் திருவிழா நிகழ்வானது எதிர்வரும் ஆவணித் திங்கள் பதினொராம் நாள் 27.08.2013 திகதி நண்பகல் 12.00 மணிக்கு திருக் கொடிற்யேற்றும் நிகழ்வுடன் ஆரம்பமாகி ஆவணித் திங்கள் இருபதாம் நாள் 05.09.2013 திகதி காலை 09.00 மணிக்கு முருகப்பெருமானின் சமுத்திர தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறும்.
திருவிழா காலங்களில் முதல் எட்டு நாள் திருவிழா நிகழ்வுகள் மாலை 06.00 மணிக்கு ஆரம்பமாகுவதுடன், ஆவணித் திங்கள் பத்தொன்பதாம் நாள் 04.09.2013 திகதியன்று முருகப் பெருமான் பிரமாண்டமான சித்திர சிற்பத் தேரினில் பவணிவந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் தேர்த்திருவிழா நிகழ்வும் சிறப்புற நடைபெற இருக்கின்றது.
சகல் திருவிழாக்களின் போதும் சுவாமி உள்வீதி , வெளிவீதி ஆகியவற்றில் வலம்வருதல் இரவு 08.00 மணிக்கு இடம்பெறும். பூசை நிறைவடைந்ததும் ஆலய வளாகத்தில் கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், திருவிழா ஆரம்ப தினத்தன்று 27.08.2013 திகதி காலை 08.00 மணிக்கு அரசடி சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து திருக் கொடிச் சீலை எடுத்துவரப்படும்.
ஈழத்து திருச்செந்தூர் முருகப் பெருமானின் திருவிழாக்களில் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.



.jpg)














