திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய அரச ஊழியர்களின் திருவிழா நிகழ்வுகள்.

 (உ.உதயகாந்த்)
தேசத்துக் கோயிலென அழைக்கப்படும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடிஅமாவாசை உட்சவ திருவிழா 20.07.2013 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  15 ஆம் நாள் திருவிழா நிகழ்வானது கடந்த 02.08.2013 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேசங்களின் அனைத்து அரச தாபனங்களினதும் ஊழியர்களின் திருவிழாவாக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இத் திருவிழாவில் ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகங்களின் ஊழியர்கள் தங்களது பிரதேச செயலாளர்கள் வீ.ஜெகதீசன் மற்றும் எம்.கோபாலரத்தினம் ஆகியோரின் தலைமையில் பங்குபற்றிய காட்சிகளே இவை.