(ஆலையடிவேம்பு நிருபர்)
அக்கரைப்பற்று, பொத்துவில் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மருதடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள யாத்திரிகர் மடத்திற்கான அடிக்கல் நடும் விழா 01.08.2013, வியாழக்கிழமை பி.ப. 4.00 மணிக்கு ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன அவர்களின் 200,000.00 பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்படவுள்ள இப் புதிய யாத்திரிகர் மடத்திற்கான அடிக்கல் நடும் விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பி.எச். பியசேன, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு. வே. ஜெகதீசன், ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் திரு. ஆர். வடிவேல், ஆலயக் குருக்கள் சிவஸ்ரீ. கே. குமுதேஸ்வரசர்மா, கிராமசேவை உத்தியோகத்தர்களான திரு. ஏ. தர்மதாச, திரு. ப. பத்மநாதன், ஆலய நிர்வாகசபை தலைவர் திரு. சோமசுந்தரம், பாராளுமன்ற உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் ஜனாப். றியாஸ் மற்றும் ஆலய திருப்பணிச்சபை ஊழியர்களுடன் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.












