கொழும்பு கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கன்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்,முஸ்லீம் சிறுபான்மையின மக்களுக்கு இடையே வன்முறைகளை தோற்றுவித்து பிரித்தாளும் தந்திரங்களை கையாண்ட அரசாங்கம் விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் தற்போது முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலை வெளிப்படையாகவே ஆரம்பித்துள்ளது என்பதையே கொழும்பு கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது.
முஸ்லீம் மக்கள் தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படாததன் விளைவே இன்று இலங்கையில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இனமாக முஸ்லீம் இனமக்கள் வாழவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஏனெனில் அன்று எவ்வாறு தமிழ் மக்கள் மீது வன்முறை திணிக்கப்பட்டதோ அதேபோன்றுதான் இன்று முஸ்லீம் மக்கள் மீது திட்டமிட்டு வன்முறைகள் திணிக்கப்படுகின்றது.
தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடங்கி இன்று கொழும்பு கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் வரைக்கும் முஸ்லீம் கட்சிகள் உட்பட அனைத்து முஸ்லீம் தலமைகளும் கையாலாகாதவர்களாகவே உள்ளனர்.
ஏனெனில் முஸ்லீம் தலமைகள் அனைத்தும் பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் முஸ்லீம் இனத்தின் தனித்துவத்தையும், பாதுகாப்பையும் அரசாங்கத்திடம் அடகுவைத்திருக்கின்றார்கள்.
எனவே என்னதான் முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு வெளிப்படையாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டாலும் முஸ்லீம் தலமைகள் பதவிகளை துறப்பதற்கோ அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு மனமின்றி மௌனம் சாதித்து வருகின்றனர்
எங்களை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட தமிழ் , முஸ்லீம் சிறுபான்மையின மக்கள் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டிய காலம் மீண்டுமொருமுறை ஏற்பட்டுள்ளது. இதனை முஸ்லீம் தலமைகள் புரிந்துகொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வரவேண்டும்.
அதை விடுத்து முஸ்லீம் தலமைகள்; தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை நம்பிச் சென்று மீண்டுமொறு வரலாற்றுத் தவறை செய்வார்களானால் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை மீண்டும் முஸ்லீம் தலமைகளுக்கு ஏற்படும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார்.













