டச்பார் - கல்லடி பங்கின் பாதுகாவலரான புனித இஞ்ஞாசியாருக்கு விழா

(உ.உதயகாந்த்)
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் டச்பார் - கல்லடி பங்கின் பாதுகாவலரான புனித இஞ்ஞாசியாருக்கு விழா கொண்டாடுமுகமாக கடந்த 26.07.2013 திகதி பங்குத்தந்தை அருட்பணி ஜீவராஜ் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, ஆலயப் பெருவிழா நவநாள் திருப்பலிகள் வட்டார மக்களின் ஒழுங்கமைப்புடன் மிகவும் சிறப்புற நடைபெற்றது.

புனித இஞ்ஞாசியாருக்கு விழா கொண்டாடுமுகமாக ஆறாவது திருவிழா நிகழ்வினை சவேரியார் வட்டார இறைமக்கள் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடியதனையும் , அன்றைய திருவிழா திருப்பலியில் அருட்பணி கிறைட்டன் அவுஷ்கோன் அடிகளார் கலந்து கொண்டு திருப்பலியினை ஒப்புக்கொடுப்பதையும், இறை மக்கள் திருவிழா திருப்பலியில் கலந்துகொண்டு சிறப்பிப்பதையும் படங்களில் காணலாம்.