திருப்பெருந்துறை மட்டக்களப்பு இணைப்பு வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வு.

(உ.உதயகாந்த்)
தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தில் முன்னால் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் முன் மொழிவிற்கு அமைய மட்டக்களப்பு மாநகரையும் திருப்பெருந்துறை கிராமத்தினையும் இணைக்கும் வாவி வளி வீதியானது  150 இலட்சம் ரூபாய்  செலவில் நிர்மானிக்கப்படவுள்ளது. 

இக் கிராமத்தில் வாழ்ந்து வரும்  மக்கள் மட்டக்களப்பு நகரப் பகுதிக்கு தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவதற்காக சுமார் 5 -6 கிலோமீற்றர்  தூரம் பயணிக்க வேண்டிய நிலைபாட்டிலே இருந்து வருகின்றமையினை அவதானித்ததன் பயனாக தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தில் முன்மொழியப்பட்டு அனுமதிக்கப்பட்ட இப்  புதிய பாதை நிர்மானிக்ககப்படுவதன் மூலம் அக் கிராம  மக்கள் 1 -2 கிலோ மீற்றர் தூரம் பிரயாணிப்பதநூடாக  மட்டக்களப்பு நகரப் பகுதிக்கு  பயணிக்கக் கூடியதாக அமைவதற்கு வாய்ப்பேற்படவுள்ளது.

இவ் வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வில் முன்னல் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் சீ.கிரிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேள், முன்னால் பிரதிமேயர் ஆ.ஜோர்ச்பிள்ளை மற்றும் மாநகரசபை பொறியியலாளர் எம்.அச்சுதன உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பிரதேச வாழ் மக்களும் இப் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.