பட்டிருப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் செய்திக்கு மறுப்பு

(சித்தா)
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக திரு. மு.விமலநாதன் கடமையாற்றி வருகின்றார். இந் நிலையில் கடந்த 09.08.2013 ஆம் திகதி பத்திரிகை ஒன்றில் வெளியான 'பட்டிருப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் இடமாற்றம்' எனும் செய்தி தனக்கு மனவேதனையை அளிப்பதாக வெற்றி நியூஸ் செய்திக்கு தெரிவித்தார்.