மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தப்படுகின்ற திட்டமிட்ட குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெட்ணம், கிழக்கு மாகாண காணி ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரதி அனுப்பி வடுத்துள்ள இக் கேரிக்கைக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2004ம் ஆண்டுக்குப் பிறகு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எல்லைக் கிராமங்களில் அத்து மீறிய திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மட்டக்களப்பின் வரலாற்று ரீதியாக காணி எல்லைகளை மாற்றக் கூடிய புதிய வீதிகள் அமைப்பும், அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்துதல் பிக்குமாரும், ஒருசில பாதுகாப்புதரப்பினரும் தவறான திட்டமிட்ட குடியேற்றத்தை மேற்கொள்ளுதல்.
தமிழர்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருத்தல் போன்ற செயற்பாடுகள் குறிப்பிட்ட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்து வருகின்றன. இதனால் இனமுரண்பாடுகளை தோற்றுவிப்பதோடு, பிரதேச ரீதியான சிங்களவர்களின் இனப்பரம்பலையும் அதிகரிககச்செய்யும் இந்த வகையில் இம்மாவட்டத்தில் நடக்கின்ற திட்டமிட்ட குடியேற்றங்களை கீழ் தருகின்றோம்.
1)பிரதேச செயலாளர் பிரிவு- வவுணதீவு
யு)கிராமசேவகர் பிரிவு- உன்னிச்சை -184யு
வெட்டிப்போட்டசேனை:- மணலேத்தம், மாவலையாறு ஆறுபோன்ற இடங்களில் குடும்பங்களும் (40ஏக்கர் காணியும்)
----------------------------------------------------
இப்பகுதியில் 2004ம் ஆண்டுக்குப் பிறகு ஊர்காவல் படையினரும் ஒருசில சிங்கள மக்களும் அரசஅனுமதியற்ற முறையில் காணிகளைப் பிடித்து விவசாயம் செய்வதோடு, வீடுகளையும் அமைத்து வருகின்றனர். இப்பகுதியில் பல காணிகள் மேய்ச்சற் தரைக்கு ஓதுக்கப்பட்ட காணிகள் ஆகும். இப்பகுதிக்குச் செல்லும் கால்நடைகளை சுருக்கு வைத்துப் பிடித்து கால்நடை உரிமையாளரிடமிருந்து பல்லாயிரக்கணக்கான பணத்தை அறவிடுகின்றனர். இப்பகுதியில் ரஞ்சித், அமர வண்து, புஞ்சிவண்டா போன்றோர் தலைமையில் விவசாயம் செய்கின்றர்.
குதம்பா கதிரவேல்மலை அருகில்
-------------------------------------------------------
குதம்பா பகுதியில் மூன்று குடும்பங்களும், ஊர்காவல் படையினரும் 400 ஏக்கருக்கு மேற்ப்பட்ட காணியில் விவசாயம் செய்கின்றனர்.
வெள்ளைக்கல் தளவாய் மலை
----------------------------------------------
2 குடும்பங்களும் 20 ஏக்கர் காணி
கறுவாச்சோலை
------------------------
கறுவாச்சோலை (குளத்தருகில்) பகுதியில் மூன்று குடும்பங்கள் 40ஏக்கர் காணி
டீ) கிராம சேவையாளர் பிரிவு:- காந்தி நகர்- 148சி
200வில் கிராமம், சிப்பிமடு சந்தி இப்பகுதியில் 1985ம் ஆண்டு அண்ணளவாக 30 குடும்பங்கள் வசித்து வந்தனர். சிங்களப் பாடசாலையும், விகாரையும், இருந்த வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வருவதில் ஆட்சேபனை இல்லை ஆனால் தற்சமயம் புதிய சில குடும்பங்கள் மீள்குடியேற்றப் பட்டு மேலும் பல புதிய குடும்பங்களை இப்பகுதிக்கு கொண்டு வந்து கண்டியனாறு பகுதியை நோக்கியும் மங்களஒயா பகுதியை நோக்கியும் செல்வதற்கு திட்டங்கள் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
2) பிரதேச செயலாளர் பிரிவு- (ஏறாவுர்பற்று) செங்கலடி
கிராம சேவகர் பிரிவு- கெமுனுபுர - 135ஏ
யு) சர்வோதயவீதி தொங்கல் அருந்தலாவைச் சந்தி -வொய்ப்பல
--------------------------------------------------------------------------------------------------------------------
வதுளை வீதியிலுள்ள செங்கலடி எல்லையான தென்பிட்டிச்சந்தி முன்பாகவுள்ள பெரிய புல்லுமலை சந்தியிலிருந்து மங்களகமைக்குச் செல்லும் சர்வோதய வீதியில் அருந்தலாவைச் சந்தி அருகில் ஊர்காவல் படையினரும், ஒருசில சிங்களவர்களும் கொட்டில் அமைத்து 100 ஏக்கருக்கு மேற்ப்பட்ட காணியில் விவசாயம் செய்கின்றனர்.
டீ)கிராமசேவகர் பிரிவு - புல்லுமலை-185
1)40ஏக்கர் குளத்தின் மேல் பகுதியில் அண்ணளவாக 500 ஏக்கருக்கு மேற்ப்பட்ட காணிகளை 30க்கு மேற்ப்பட்ட வாடிகளை அமைத்து ஊர்காவல் படையினரும் சேர்ந்து கௌப்பி செய்கின்றனர்.
2)கிராமசேவர் பிரிவு :- கோப்பாவெளி - 146ஏ
பாக்கு வெட்டிப்போட்டமடு
-----------------------------------------------
பாக்குவெட்டிப்போட்ட மடு (சின்னஆறு மேற்ப்பகுதி) 40;குடும்பங்களுக்கு மேற்ப்பட்டவர்கள் வாடி கட்டி விவசாயம் செய்கின்றனர். இவர்களோடு ஊர்காவல் படையினரும் 500ஏக்கருக்கு மேற்ப்பட்ட காணிகளிலும் விவசாயம் செய்கின்றர் இவர்;களுக்கு துப்பாக்கியும் வழங்கப்பட்டுள்ளது.
இப்பகுதிக்குச் செல்லும் கால்நடைகளை பிடித்துக் கட்டி பணம் அறவிடுகின்றனர்.
3)பிரதேச செயலாளர் பிரிவு :-வாகரை (கோறளைப்பற்று வடக்கு)
கிராமசேவகர் பிரிவு:- புணானை- 211வி
யு)புணானை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆமிகேம்புக்கு பின்புறமாக
-----------------------------------------------------------------------------------------------------------------------------
வெளிக்கந்த, திம்புலாகல, மண்ணம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 25ற்கு மேற்ப்பட்ட சிங்கள குடும்பங்களை 2013ம் ஆண்டு 3ம்மாதத்திற்குப் பிறகு மேற்குறிப்பிட்ட பகுதிக்கு கொண்டு வந்து வீடுகளை அமைத்து தேவையான உதவிகளைச் செய்து குடியேற்றி உள்ளனர். புதியவிகாரைகளும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கிராமசேவகர் பிரிவு:- தோணிதாட்டமடு -213சி (புச்சாக்கேணி)
தோணிதாட்டமடு மேற்பகுதியில் சேர்வல தொடக்கம் வெளிக்கந்தைக்குச் செல்லும் புதியபாதை அருகில் மாவில்ஆறுப்பகுதி)
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இவ்வீதியில் கல்லரிப்புப் பகுதியில் 2013ம் ஆண்டுக்குப் பிறகு 2கிலோமீற்றர் தூரமளவில் கிட்டத்தட்ட 200 சிங்கள குடும்பங்களை ஆமத்துறுவும், இராணுவமுமாகச் சேர்ந்து குடியேற்றி உள்ளனர். இவர்கள் இருக்கும் பகுதி வாகரை பிரதேச செயலகக் பிரிவிற்கு உட்பட்ட தோணிதாட்ட மடுவிற்குச் சொந்தமான பகுதியாகும். தற்சமயம் இக் கிராமமும் இராணுவம் இருக்கும் முகாமும் இப் பிரதேச செயலகத்துக்குள் அடங்காது என கூறுகின்றனர்.
4)பிரதேசசெயலாளர் பிரிவு -கிரான்
கிராமசேவகர் பிரிவு - குடும்பிமலை -209டி
மாந்திரிஆறு, மயிலத்தமடு, இராணுவ முகாமருகில் பெரியமாதவணை வேதாளமலை
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மந்திரிஆறு மட்டக்களப்பு மாவட்ட எல்லை இதன் உள்பகுதியில் மயிலத்தமடு உள்ளது. இதன் அருகில் இராணுவ முகாம் இதிலிருந்து பெரியமாதவணை தொடங்குகின்றது இவ் வயல் வெளியில் 2011ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 40 குடும்பத்திற்கு மேற்ப்பட்ட சிங்களக் குடும்பங்கள்
சிறிய வீடுகளை அமைத்து வேளாண்மை ,தென்னை,வாழை,உழுந்து, பயறு,கொச்சிபோன்ற விவசாயச் செய்கையில் ஈடுபடுகின்றனர். இக் காணிகள் அனைத்தும் கால்நடைகளுக்கு மேய்ச்சற் தரைக்கென ஒதுக்கப்பட்ட காணிகளாகும். கால்நடைகளை கட்டி பணம் அறவிடு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் அனைவரும் பொலநறுவை மாவட்டத்தைச் சேர்ந்த அறுகம்வலை, மோடின்வல் இடத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடத்தக்கதாகும்.
5)பிரதேச செயலாளர் பிரிவு - பட்டிப்பளை
கிராமசேவகர் பிரிவு - கச்சைக்கொடி சுவாமிமலை -135சி
கோம்பஸ்தலாவ – கெவிளியாமடு, புளுக்குணாவ பகுதி
-------------------------------------------------------------------------------------------
2012ம் ஆண்டு இப்பகுதியில் 76ற்கு மேற்ப்பட்ட சிங்கள குடும்பங்களும், புதியவிகாரைகளும், புதிய வீடுகளும் பிக்குமாராலும் இராணுவத்தினராலும் அனுமதியற்ற முறையில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இது மட்டுமின்றி இதேவேளை புளுக்குணாவ, ஐம்பதுகுடும்பம், கெவிளியாமடு 285 சிங்கள குடும்பம், கெவிளியாமடு 25 தமிழ்க்குடும்பம் நிரந்தரமாக வசித்து வருவதோடு, இன்னும் 80ற்கு மேற்ப்பட்ட தமிழ்குடும்பம் மீளக்குடியமரவேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
1)மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமசேவையாளர், பிரதேசசெயலாளர், மாவட்டஅதிபர் ஆகியோரின் அனுமதியின்றி நிதி நிறுவனங்கள் வீடு கட்டுவதற்கான நிதியை வழங்குவதும், வாக்காளர் இடாப்பில் பெயர் பட்டியல் இல்லாமல் குடியேற்றுவது, பிரதேச செயலாளரின் காணி தொடர்பான அறிவுறுத்தலின்றி காணி வழங்குவது, மதகுருவும், இராணுவமும், பொருளாதார அமைச்சும் சட்டத்திற்கு முரணாக, நீதிக்கு புறம்பாக தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி குடியேற்ற திட்டத்திற்கு நீதிமுறைக்கு உட்படாமல் சிங்கள குடியேற்றங்களைச் செய்துவருவதை அதிகாரிகளால் நிறுத்த முடியவில்லை. அப்படி அதிகாரிகள் நிறுத்த முயற்சித்தால் இடமாற்றமும், அச்சுறுத்தலும் தொழிலுக்கு ஆபத்தான நிலைமையில் இம் மாவட்டத்தில் வேலை செய்யும் பலஅதிகாரிகளுக்கு ஏற்ப்பட்டுள்ளன. இதே போல் முஸ்லிம் தமிழ் பிரதேச எல்லைகளில் சில காணி தொடர்பான முரண்பாடுகள் பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருக்கின்றன. இந்த விடயமும் அரசியல் வாதிகளின் ஆளுகைக்குட்பட்டு இத் தகராறை தீர்க்க வெளிக்கிடும் போது இனமுறுகலுக்கு வழிவகுக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் இனப்பரம்பலை குறைத்து சிங்கள பரம்பலை பிரதேச ரிதீயாக அதிகரிப்பதற்கும் எல்லைப்பகுதியிலுள்ள
குறிப்பாக:- செங்கலடி, வாகரை, கிரான், போன்ற பிரதேசசெயலாளர் பிரிவு எல்லைகளிலுள்ள காணிகளை வேறு மாவட்டங்களுடன் இணைப்பதற்கும் ஒரு மறைமுகமான நிருவாக வேலைகள் நடந்து வருகின்றன. அடுத்து வரும் கால கட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்மக்களின் நிலை கவலைக்கிடமாக மாறும். ஆளும்தரப்பிலுள்ள அமைச்சர்கள் இது தொடர்பான விடயங்களை சம்மந்தப்பட்டவருடன் பேசினால் அவர்களுக்கும் பல நெருக்கடிகள் உருவாகுமென அஞ்சுவதாக அறிகின்றோம்.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகின்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு பலமான சக்திகளாலும,; அதிகாரிகளாலும், அரசியல் ஆளும்தரப்பினராலும் முடியாத காரியமாகும். எனவே நடக்கின்ற திட்டமிட்ட குடியேற்றங்களை தடுத்து நிறுத்த நீதியை நாடவேண்டும். அதுவும் தோற்கும் பட்சத்தில் தமிழர்களின் நலன் விரும்பும் சக்திகள் தலையிட முன்வர வேண்டும்.