கண்டுதரிசித்தால் கறுமைவினைதொலைக்கும் மண்டூர் கந்தனின் ஒன்பதாம் நாள் திருவிழா

"தில்லை மரக்காடிங்கு திகழ்ந்ததென்றும் திருவேடர் குலமிங்கு வாழ்ந்ததென்றும் ஒல்லையிலே நீர்விட்ட வேலொன்றோடி ஒளி வீசி தில்லைதனில் பதிந்ததென்றும் வல்ல பெரு வேடரதைக் கண்டாரென்றும் வடிவாகத் தேனமுது செய்தார் என்றும் எல்லையில்லாப் புகழோடு நீ இங்கு இருந்தாய் என்றும் .............." என வேடுவர் குலத்தவர் தில்லை மண்டூர் முருகனைப் பூசித்த அழகினை மண்டூர் கவிஞர் மு.சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் அழகாகப் பாடியிருக்கின்றார். மண்டூர் முருகனாலய 9ம் நாள் திருவிழா முருகனது தங்க வேலினைக்கண்டு பூசித்து வந்த வேடுவ பரம்பரையினர்க்குரியதாய் உள்ளது. ஆரம்ப காலத்தில்
வேடுவர் தங்க வேலுக்கு கொத்துப்பந்தல் அமைத்து வில்லு மற்றும் அம்போடு காவல் செய்த மரபு இன்றும் வேடுவ பரம்பரையில் ஒருவர் சுவாமி வீதி வலம் வரும்போது சுவாமிக்கு முன்னால் வில்லம்போடு வலம் வருவது குறிப்பிடத்தக்கது .கதிர்காமத்திலும் இப்படியான முறைமை காணப்படுகின்றது. இன்றைய நாளிலேதான் முருகப்பெருமான் ஒளிப்பிழம்பாக வந்து அடியவர்களுக்கு காட்சி கொடுப்பதாக ஒரு நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகின்றது .
(சபா .விதூஷகன்)
​