புனித மிக்கேல் கல்லூரி 140வது வருட நிகழ்வில்....

மண்மணக்கும் மட்டக்களப்பு மற்றவரும் உற்றவராய் வாழ்ந்து செல்லும் பதி> பல் மதத்தார் மதித்து வாழும் பூமி என்பதற்கு அப்பால் கல்வி மான்களும்> அறிஞர்களும்> புலவர்களும் ஆய்வாளர்களும் உருவாகிய இடம் மீன்பாடும் நாடு> வாவி மகள் வளைந்தோடும் ஈரமண் என்றால் அதில் மிகையில்லை. அப்படிப்பட்ட வளங்களை செழித்தோங்க வைத்தவைகளில் பாடசாலைகளின் பங்கு இன்றியமையாதவை. இந்தப் பாடசாலைகளுக்குள் மணிகளில் மாணிக்கமாய் திகழ்வது மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி என்றால் அது மிகையல்ல. 


புனித மிகேல் கல்லூரி இன்று அதன் 140 வது ஜனன தினத்தை கொண்டாடுகின்றது. இது மட்டு மாநகரின் புளியந்தீவுப்பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த கல்லூரியாகும். இந்தப்பாடசாலை 1873ம் ஆண்டில் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் அவர்களால் பாசல் முதலியாரின் நில அன்பளிப்பில் வெறும் மனித வலுக்ககை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு பழம்பெரும் பாடசாலையாகும். 

இது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கற்பிக்கப்படும் ஒரு ஆண்கள் உயர்தரப்பாடசாலையாக மிளிர்கிறது. "ஆண்டவனை விட யார் உயர்ந்தவர்" என்ற வாசகத்தை தாங்கிய ஒரு முன்னோடிப் பாடசாலையாக இருக்கிறது.

இக்கல்லூரியின் 140ஆவது ஆண்டினை முன்னிட்டு மைf;கல் வோக் நிகழ்வு காலையில் இடம்பெற்றது. தவிரவும் இன்னும் பல நிகழ்வுகள் இதனை சிறப்பிக்க மரதன், கல்லூரி நாள் கொண்டாட்டம் என்பன நடாத்தப்பட இருப்பதும் குறிப்பி;த்தக்கது.



இதன் வரலாறு> வளர்ச்சி> சேவைகள்> என்பன போன்ற விடயங்களை உற்றுநோக்குதல் சிறப்பானதாகும். இந்தப்பாடசாலை வளர்சிக்கு பிரான்சில் இருந்து வருகைதந்த அருட்தந்தையர்கள் காலாகாலமாக உதவி வந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து அப்போதைய பிரித்தானிய ஆளுனராக பதவி வகித்தவர்களும்> அரசாங்க அதிபர்களும் இதன் உயர்ச்சிக்கு அரும்பணியாற்றியுள்ளனர்.

இதன் சிறிது காலத்தில் அமெரிக்க இயேசு சபையைச் சேர்ந்த அருட்தந்தை லினஹான் முதன்முதலாக 1933 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்ததைத்தொடர்ந்து பல அருட்தந்தையர்கள் இந்த பாடசாலைக்கு பல அர்ப்பணிப்பான உதவிகளை செய்தனர். காலவோட்டத்தில் 1933 இல் அருட்தந்தை இம்மானுவேல் க்ரௌதர் கல்லூரியின் தலைவராகவும்> அதிபராகவும் நியமிக்கப்பட்டார். குறிப்பாக 1959 இல் நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த சமயம் புனித மிக்கேல் கல்லூரியை தாங்களே பொறுப்பேற்று கட்டணங்கள் ஏதும் இன்றி நடாத்த இயேசு சபை திருச்சபையினர் தீர்மானித்து 1970 வரை இதனை நிருவகித்து வந்தனர். இருப்பினும் இது அருட்தந்தை மோரான் அவர்களின் முடிவில் இறுதியில் அரசாங்கப்பாடசாலையானது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி வாளாகத்திலுள்ள நிறுவனரின் சிலை

இந்தப்பாடசாலையானது காலகாலமாக சிறந்த பண்புள்ள> கடமையுணர்வுள்ள மற்றும் மனிதநேயப்பண்புள்ள மனித விருட்சங்கள் உருவாக விதையாக இருந்த ஒரு ஒழுக்கமான பாடசாலையாக இருந்து மட்டக்களப்பில் தலை சிறந்த மாணவச் செல்வங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பாடசாலை> விளையாட்டு> கலை> கலாசாரம்> தொண்டாண்மை என்ற பல்வகைத்தன்மைகளில் தன்னை நிலைநிறுத்தி ஏனைய பாடசாலைகளுக்கு ஒரு எLத்துக்காட்டாக விளங்குகின்றது. அத்துடன் சாதாரண தரம் மற்றும் உயர்தர பாடசாலை மாணவர்கள் வருடாவருடம் பல சாதனைகளை செய்துவருவது பாராட்டுதற்குரியது.

புனித மிக்கேல் பாடசாலை மாணவர்கள் நல்ல மனிதாபிமானப் பண்புள்ளவர்களாக உருவாக்கப்படுவதனாலும்> சிரேஸ்ட்ட மற்றும் கனிஸ்ட்ட மாணவர்கள் நல் உறவுகளுடன் வளர்க்கப்படுவதனாலும் உலகில் எங்கு வாழ்ந்தாலும் பாடசாலை பழையமாணவர்கள் தன்னை வளர்த்த பாடசாலை> வளர்த்த மண் என்ற வகையில் அனர்த்த காலம் மற்றும் இடர்கள் நேரும் நேரங்களில் தொண்டாண்மையுடன் கூடிய மனிதாபிமானப்பணிகளில் ஈடுபடுவதனையும்> மாவட்டத்தில் வசதி குறைந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பொருளாதார ரீதியான நிதியீட்டங்களைச் செய்வதனூடாக தன்னை உருவாக்கிய பாடசாலைக்கும் மண்ணுக்கும் மகத்துவம் சேர்க்கும் கைq;கரியத்தினை சேவையாக செய்து வருவதும் இந்தப்பாடசாலைக்கு கிடைக்கும் மிகப்பெரிய பிரதியுவகாரமாகும். 

அத்துடன் விளையாட்டுத்துறை> கலைத்துறை மற்றும் மொழித்திறமைகளை வெளிக் கொணரும் வகையில் பல ஆக்கபூர்வமான உதவிகளையும் ஈன்று இந்தப் பாடசாலையை உயரத்தில் வைத்து பாக்க ஆசைப்படும் மாணவர்கள் இருப்பது இந்தப் பாடசாலை அளித்த ஊட்டமெனின் ஐயமில்லை. 

'அன்னயாவிலும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவ்த்தல்' என்பதற்க்கிணங்க, வறிய நிலையில் திறமையிருந்தும் இவ்வாறான பாடசாலைகளில் கல்வி பயில முடியாமல் இருக்கும் மாணவர்களையும் வளர்த்து விடும் பெரும் உள்வாங்கலையும், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளுடைய அனுசரனையுடன் செய்ய முன்வரவேண்டும் என்பது எமது எதிர்பார்பும் அவாவுமாகும்.

இப்படியான இந்தப்பாடசாலை ஒரு பெரு விருட்சமாக இருந்து பல ஆயிரம் மக்களுக்கு வைத்தியர்களாகவும், பணிப்பாளர்களாகவும், கணக்காளர்களாகவும், முகாமையாளர்களாகவும் இன்னும் பல வகையிலும் பயன் தந்து கொண்டு இருக்கும் இந்தப்பாடசாலை இதன் 140 வருட பூர்த்தியை முன்னிட்டு அது பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருக்கின்றது. இது இன்னும் நல்ல நிலையில் வளர்ந்து இந்த மண்ணை காக்கின்ற ஒரு பரம்பரையை உருவாக்க வேணும் என வாழ்துகிறோம்.