செங்கலடி பிரதேச அபிவிருத்தி வங்கியின் 2ஆவது பிறந்த தினம்

பிரதேச அபிவிருத்தி வங்கியின் செங்கலடிக்கிளை வெள்ளியன்று தனது இரண்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

செங்கலடிக்கிளை முகாமையாளர் எஸ்.குலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதிகளாக உவா மாகாண பொது முகாமையாளர் டி.எம்.ரி.ஜே.குமார, ஊவா மாகாண உதவிப் பொது முகாமையாளர் டி.பி.தர்மதாச, உள்ளிட்டோரும், மாவட்ட முகாமையாளர் கே.சந்தானம், மட்டக்களப்பு கிளை முகாமையாளர் கே.சத்தியநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில், குழுச் சேமிப்பினை மேற்கொண்டுள்ள சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் ஊக்குவிப்புக் கடன்கள் வழங்கப்பட்டதுடன், சிறுவர் சேமிப்புக் கணக்கில் அதிக பணமம் சேர்த்த சிறுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.