ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விநாயக சதுர்த்தி விஷேட பூசை நிகழ்வுகள்

(ஜெஷோமிக்கா )

விநாயக சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானுக்குரிய விழாக்களில் மிக முக்கியமான   விழாவாகும்.  ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று இவ் விழா உலக  இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. 

பொதுவாக  விநாயகரின் பிறந்த நாளாக இத் தினத்தினை இந்துக்கள் கொண்டாடுகின்றார்கள்.

இந்து மக்கள் அனுஷ்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித்திதியன்று  விநாயக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டு உண்ணா நோன்பிருந்து,  தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். 

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு நேற்றைய தினம் 09.09.2013 ஆம் திகதி திங்கட்கிழமை  மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன்  ஆலயத்தில் விஷேட பூசை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், இந்திய தமிழ்நாடு மதுரையில் இருந்து வருகைதந்த  சுவாமி வேதாந்தா ஆனந்தா அவர்கள் தலைமையில் பூசை நிகழ்வுகள் நடைபெற்றது.

விநாயகப் பெருமான் கல்லடி கிராமத்தின் அனைத்து விதிகள் ஊடாகவும் பவணிவந்து பக்த அடியார்களுக்கு காட்சியளித்து அருள்பாளித்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.