பட்டக்கண்ணூஸ் நிறுவனத்தின் இலவச சிகிட்சை முகாம்

மூதூர் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களிற்கு  இலவச கண்சிகிட்சை முகாமும் மற்றும் முள்ளந்தண்டில் ஏற்படும் நோய்களுக்கு சிகிட்சையளிக்கும் நிகழ்வில் பலர் பயன்பெற்றுள்ளனர்.

கொழும்பு பட்டக்கண் நிறுவனத்தின் அனுசரணையில் மூதூர் இக்பால் சனசமூக நிலையம் ஏற்பாடு செய்திருந்த இலவச சிகிட்சை முகாம் மூதூர் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

முள்ளந்தண்டு முதுகுவலி போன்றவற்றிக்கு ஜேர்மன் சிகிட்சை முறையிலான டோர்ன் ( DORN ) சிகிட்சை முகாமில் ஜேர்மன் நாட்டு வைத்திய நிபுணர்களால் சிகிட்சையளிக்கப்பட்டது.

நாட்டன் பலபாகங்களிலும் இலவச சிகிட்சை முகாம்கள் நடாத்தி வருவதாகவும் , இச்சிகிட்சை முகாமில் 175 பேருக்கு சிகிட்சையளித்தாகபட்டக்கண்ணூஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ். ஏ. தியாகராஜா தெரிவித்தார்.