மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான அணுகு முறைகளும் சம்பந்தமான கூட்டம் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை 14ம் திகதி நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் இக்கூட்டம இடம் பெற்றது.
இக்கூட்டத்தில், சென்ற வருடம் ஏற்பட்ட வெள்ளத்தினால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் வெள்ளம் வளிந்தோட வளியமைத்தலும் மற்றும் விளை நிலங்களுக்கான சரியான நீர்ப்பாய்சலை ஏற்படுத்துதல் சம்பந்தமாக இதில் ஆராயப்பட்டன.

இதற்காக கித்துள் மற்றும் ஊறுகாமம் குளங்களை இணைத்தல், நீர் வடிகாலமைப்புப் பாதையை கொங்கிறீற்று இட்டு செப்பனிடல் போன்ற பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் விவசாயிகளினால் முன்வைக்கப்பட்டன.
இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான செயல்முறைகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன என விவசாய நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஐவன் சில்வா தெரிவித்தார்.
மீள்குடியேற்றபப் ;பிரதியமைச்சர் வி.முரளிதரன், நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ் மோகன்ராஜ், விவசாய திணைக்கள உதவி ஆணையாளர், மீள்குடியேற்றபப் ;பிரதியமைச்சின் செயலாளர் பொன் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.