றூகம் கிராத்தில் ஆயுர்வேத மத்திய மருந்தகம் திறந்து வைப்பு

(மா.சசி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் றூகம் கிராமத்தில் நிர்மானிக்க்பபட்டுள்ள ஆயுர்வேத மத்திய மருந்தகம் நேற்று(26.9.2013) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை திறந்து வைத்தனர்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக எம்.எஸ்.சுபைர் பதவி வகித்த போது அவரின் முயற்சியினால் இந்த ஆயுர்வேத மத்திய மருந்தக கட்டிடம் நிர்மானிக்கப்பட்டது.
மீள் குடியேற்ற கிராமமான இந்த கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட இந்த ஆயுர் வேத மத்திய மருந்தகம் திறந்து வைக்கப்படாமல் பல மாதங்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.