சுவீடன் ஸ்றொக் ஹோம் நகரில் நடைபெற்ற நீர்ப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு புத்தாக்கங்களை உருவாக்குதல் தொடர்பான சர்வதேச போட்டியில் இலங்கையின் சார்பாக கலந்துகொண்ட மட்டக்களப்பு கல்லடி – சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் சர்வதேச ரீதியில் ஐந்தாம் இடத்தினை பெற்றுள்ளனர்.
கிளீன் சமூக சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வலையமைப்பின் அனுசரணையுடன் சர்வதேச மட்டத்தில் மாணவர்களுக்கிடையில் இந்தப் போட்டி கடந்த 1முதலாம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெற்றது. சர்வதேச நீர் தினத்தையொட்டி கல்வியமைச்சும் மேற்படி நிறுவனமும் இணைந்து இப்போட்டியை இலங்கையில் நடத்தியது. 400 பாடசாலைகள் பங்கு பற்றிய இப்போட்டியில் மட்டக்களப்பு, கல்லடி– சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வு இலங்கையில் முதல் இடத்தை பெற்று சர்வதேச போட்டிக்குத் தெரிவுசெய்யப்பட்டது. இது தொடர்பான சர்வதேச போட்டி சுவீடன் ஸ்றொக் ஹோம் நகரில் நடைபெற்றது. இதில் 29 நாடுகளில் இருந்து பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களான நவரட்ணராஜா கிசோர், சாந்தலிங்கம் கிசாந், நடராஜா வித்தியாகரன் ஆகிய மூன்று மாணவர்களும் சிவானந்த தேசிய பாடசாலையின் ஆங்கில பாட ஆசிரியையான திருமதி எல்.எம்.பாத்லத்தும் கலந்து கொண்டனர். கால நிலை மாற்றத்தில் சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் தொட ர்பாக ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளில் புத்தாக்கங்களை உருவாக்குதல் எனும் தலைப்பில் நடை பெற்ற இந்த சர்வதேச மாநாட்டில் மேற்படி மாணவர்கள் ஆங்கில மொழியில் சமர்ப்பித்த ஆய்வு சர்வதேச ரீதியில் ஐந்தாம் இடத்தினை பெற்றுள்ளது.