(எஸ்.ஜே.பிரேம் ஆனந்த்)
கமத்தொழில் அமைச்சின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தி மற்றும் பாவனை என்பவற்றை வலுவூட்டும் வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வு கடந்த 16.09.2013, திங்கட்கிழமை ஆலையடிவேம்பில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று கிழக்கு விவசாய மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், அட்டாளைச்சேனை பிரதேச உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.ஷனீர் ஆகியோரும் விவசாயப் போதனாசிரியர்களான ஏ.ஐ.ஏ.பெரோஸ், ஏ.எச்.ஏ.முபாரக் ஆகியோருடன் பாலமுனை பிரதேச பண்ணை முகாமையாளர் நியாஸ் அவர்களும் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஈ.குலசேகரன், கிராமசேவை உத்தியோகத்தர் திருநாவுக்கரசு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பிரதேச விவசாயிகளும் கலந்துகொண்டனர்.
சமய அனுஷ்டானங்களின் பின்னர் விவசாயப் போதனாசிரியர் ஏ.எச்.ஏ.முபாரக் அவர்களின் வரவேற்புரையினைத் தொடர்ந்து விவசாயப் போதனாசிரியர் ஏ.ஐ.ஏ.பெரோஸ் அவர்களால் குவியல் முறையிலான கூட்டெரு தயாரிக்கும் செயன்முறை செய்து காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிதிகளின் உரைகள் இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியில் ஆலையடிவேம்பு பிரதேச மட்டத்தில் சேதனப்பசளையினைப் பயன்படுத்தி தமது விளைச்சல்களை அதிகரித்துக்காட்டிய விவசாயிகளுக்கு கூட்டெரு தயாரிப்பதற்கான பொருட்கள் பகிர்ந்தளிக்கும் வைபவம் இடம்பெற்றதோடு பாலமுனை பிரதேச பண்ணை முகாமையாளர் நியாஸ் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது.