மட்டக்களப்பில் கடற்கரையை சுத்தம்செய்யும் விளையாட்டுடன் கூடிய போட்டி (போட்டோ)

(ச.சுரேந்திக்கா)
மட்டக்களப்பு  Rainbow Bridge  அமைப்பால்   கடற்கரையினை சுத்தம் செய்யும் போட்டி நிகழ்வு நேற்று சனிக்கிழமை ( 31.08.2013)  பி.ப 4.00மணியளவில் கல்லடி கடற்கரையில் இடம்பெற்றது.

பிளாஸ்ரிக், கடதாசி, மற்றும் போத்தல் ஓடுகள் போன்ற பொருட்களை அகற்றும் விளையாட்டுடன் கூடிய போட்டியாகவும் இடம்பெற்றது. இந்நிகழ்வில்  சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர்கள் என சுமார் 150 மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் லீயோ கழகத்தினர்,லயன்ஸ் கழகத்தினர்,றொட்டரி கழகத்தினர் போன்றொரும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வு அங்கு வருகை தந்திருந்த பொதுமக்களின் மனங்களைக் கவர்ந்ததுடன், அனைவராலும்  வரவேற்கப்பட்டது.