வவுணதீவு பிரதேச செயலகத்தில் இரு நாட்கள் கொண்ட கவிதைப் பயிற்சிப் பட்டறை.

(மா.சசி, ச.சுரேந்திக்கா)
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனை மேற்கு கலாசாரப் பேரவை நடாத்தும் இரு நாட்கள் கொண்ட கவிதைப் பயிற்சிப் பட்டறை  மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது.
இதன்போது மாவட்ட கலாசார உத்தியோகத்தரும் கவிஞருமான த.மலர்செல்வன் மற்றும் ஆசிரியரும் கவிஞருமான என்.உருத்திரகுமாரி போன்றோர் கவிதை பற்றிய விளக்க விரிவுரைகளையும் பயிற்சிகளையும் வழங்கினர்.  
மேற்படி பயிற்சிப் பட்டறை இன்று 26ம் திகதியும்  நாளை 27ம் திகதியும் இரு நாட்கள் இடம்பெறும் என கலாசார உத்தயோகத்தர் தெரிவித்தார். இன்றைய பயிற்சிப் பட்டறையில் இப் பிரதேச பாடசாலைகளில் உயர்தரம் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் வெ.தவராஜா மற்றும் உதவி பிதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு,காலசார உத்தியோகத்தர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.