(மா.சசி)மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் மேற் கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் நேற்று(26.9.2013)திறந்து வைக்கப்பட்டன.
காங்கேயனோடை அல் அக்ஸா மாகா வித்தியாலயத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் மற்றும் ஹிஸ்புல்லா வித்தியாலயத்தில் நிர்மாணிக்க்பபட்டுள்ள சிறுவர் பூங்கா என்பன இதன் போது திறந்து வைக்கப்பட்டு நினைவுக்கல்லும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் சவூதி அரேபிய நாட்டின் மத விவகார கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சின் பணிப்பாளர் அஸ்ஸெய்க் அப்துல் கரீம் இப்றாகீம், சஊதி அரேபியாவின் ஆசிய நாடுகளுக்கான பணி;ப்பாளர் அஸ்ஸெய்க் அகமத் றூமி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஜனாதிபதியின் ஆலாசகர் ஏ.சி.மசூர் மௌலானா, காத்தான்குடி நகர சபையின் பதில் முதல்வர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உட்பட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அதிகாரிகள் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டு இந்த அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்.
இதன் போது பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.





















