தாயை மீட்டுத்தருமாறு மகன் கோரிக்கை

சவூதி அரே­பி­யா­விற்கு வீட்டுப் பணிப்­பெண்­ணாக சென்ற தனது தாயை மீட்­டுத்­தர உத­வு­மாறு 7வயதுச் சிறு­வ­னான அனு­லக் க்ஷன் கோரிக்கை விடுத்­துள்ளார்.
இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:-
பெரி­ய­நீ­லா­வணை கோப்­ரேசன் சுனாமி வீட்­டுத்­திட்­டத்தில் வசித்து வந்த 29 வய­து­டைய கண­பதி சுகந்­தினி என்ற பெண் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி சவூதி அரே­பி­யா­வுக்கு பணிப்­பெண்­ணாக சென்­றுள்ளார்.
கடந்த யுத்­தத்­தினால் தனது கண­வனை இழந்த குறித்த பெண் தனது பிள்­ளையை வளர்ப்­ப­தற்­கா­கவே வெளி­நாடு செல்ல முடிவு எடுத்­த­தாக உற­வி­னர்கள் தெரி­விக்­கின்­றனர்.இதற்­கி­ணங்க தனது குழந்­தையை உற­வி­னர்­களின் பரா­ம­ரிப்பில் விட்­டு­விட்டு சென்று இரண்டு வரு­டங்கள் உற­வி­னர்­க­ளுடன் தொடர்­புடன் இருந்­த­தா­கவும் பின்னர் 2012ஆம் ஆண்டில் இருந்து எந்தத் தொடர்பும் அற்று எவ்­வித தக­வல்­க­ளையும் பெற­மு­டி­யாத நிலையில் இருப்­ப­தா­கவும் உற­வி­னர்கள் தெரி­விக்­கின்­றனர்.
இதே­வேளை இப்­பெண்ணை வெளி­நாட்­டுக்கு அனுப்பி வைத்த முக­வ­ருடன் தொடர்பு கொண்டு அவர் மூலம் பணிப்­பெண்­ணாக கட­மை­யாற்­றிய எஜ­மா­னிடம் தொடர்பை ஏற்­ப­டுத்­தி­ய­போது சுகந்­தினி இலங்கை வந்­து­விட்­ட­தாக தெரி­விப்­ப­தாக சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.எனவே, இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி தனது தாயை மீட்டுத்தர உதவி செய்யவேண்டும் என அனுலக் ஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.