சவப்பெட்டிக்கடை ஒன்று தீயில் எரிந்து சாம்பல்

(அபிவரன்)

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில்  சவப்பெட்டிக்கடை ஒன்று தீயினால் எரிந்து சாம்பலாகிய சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்

ஆலையடிவேம்பு சாகாம வீதியில் வெலிங்டன் சினிமா தியேட்டருக்கு அருகாமையில் தகரத்தால்; கட்டப்பட்ட  சவப் பெட்டிக்கடை இன்ற அதிகாலை வேளையில் இனம் தெரியாதேரினால் தீயிடப்பட்டுள்ளதையடுத்து கடையில் இருந்த சவப்பெட்டியுடன் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை இவ் சவப் பெட்டிக்கடைக்கு அருகில் இருந்த மரக்கறி பெட்டிக்கடை ஒன்றும் கடந்த மாதம் இனந் தெரியாதேரினால் தீயிட்டுள்ளதையடுத்து கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது