பட்டிருப்பு கல்வி வலயம் முழுவதையும் உள்ளடக்கியதாக நடைபெற்ற இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களும், சிறப்பு அதிதியாக வலயக்கல்வி அலுவலக கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ். ஞானராசா அவர்களும், கௌரவ அதிதியாக போரதீவுப் பற்று பதில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் அவர்களும், விசேட அதிதியாக கிராம சேவை உத்தியோகத்தர் ரி. ராகுலன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இவ்விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், கழகங்கள், சங்கங்களின் உறுப்பினர்கள் என பெருவாரியானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எழுத்தறிவூட்டல் வகுப்புகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், வறிய குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் ஊக்குவிப்பு பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.












