(உ.உதயகாந்த்)
கிழக்கிலங்கையின் மீன் பாடும்
தேன் நாடாம் மட்டு மாநகரின் திருச்செந்தூர் பதிதனில் கோயில் கொண்டு அடியார்களுக்கெல்லாம்
அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஈழத்து திருச்செந்தூர் முருகன்
ஆலயத்தின் வருடாந்த மஹோசவத் திருவிழா நிகழ்வானது ஆவணித் திங்கள் பதினொராம்
நாள் 27.08.2013 திகதி திருக் கொடிற்யேற்றும் நிகழ்வுடன் ஆரம்பமாகி எட்டு நாட்களாக ஊர் பொதுமக்களினால் மிகவும் சிறப்பான முறையில் திருவிழா பூசைகள் நடைபெற்றன.
முருகப்பெருமான் சிற்பத் தேரினில் பவணிவந்த காட்சிகளின் காணொளிகள்.
கிழக்கிலங்கையின் மீன் பாடும்
தேன் நாடாம் மட்டு மாநகரின் திருச்செந்தூர் பதிதனில் கோயில் கொண்டு அடியார்களுக்கெல்லாம்
அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஈழத்து திருச்செந்தூர் முருகன்
ஆலயத்தின் வருடாந்த மஹோசவத் திருவிழா நிகழ்வானது ஆவணித் திங்கள் பதினொராம்
நாள் 27.08.2013 திகதி திருக் கொடிற்யேற்றும் நிகழ்வுடன் ஆரம்பமாகி எட்டு நாட்களாக ஊர் பொதுமக்களினால் மிகவும் சிறப்பான முறையில் திருவிழா பூசைகள் நடைபெற்றன.
ஒன்பதாம் நாள் திருவிழாவாகிய இன்று முருகப் பெருமான்
பிரமாண்டமான சித்திர சிற்பத் தேரினில் பவணிவந்து பக்த அடியார்களுக்கு அருள்பாலிக்கும்
தேர்த்திருவிழா நிகழ்வு மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி பக்த அடியார்கள் புடைசூழ மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இன்றைய தேர்த்திருவிழா நிகழ்வினை கல்லடி முகத்துவாரம், திருச்செந்தூர், டச்பார், நாவலடி ஆகிய கிராமங்களின் பொதுமக்களினால் நடாத்தப்பட்டதுடன், முருகப்பெருமானின் தேர்த்திருவிழா நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


















