சொறிக்கல்முனை கமு/ சது திருச்சிலுவை மகாவித்தியாலயத்தின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டு விழா 25.09.2013 நடைபெற்ற போது அதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.அவர் அங்கு உரையாற்றுகையில்
கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னதாக இந்த பாடசாலைக்கு வந்திருந்த போது பாடசாலையின் நிருவாகத்தினர் பாடசாலைக்கு சுற்று மதில் அமைத்துத் தருமாறு கேட்டுகொண்டனர். நான் அமைத்து தருவதாகவும் உறுதியளித்தேன்.
அந்த உறுதி மொழியை எனது 2013ம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக இந்த சுற்று மதில் அமைப்பதை நிறைவேற்றியுள்ளேன்.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், எதிர்காலத்தில் எமது சமூகத்தினை வழிநடத்தி செல்லும் பொறுப்பு உங்கள் கைகளிலே உள்ளது.
கல்வியினை சிறப்பாக பெற்று எதிர்காலத்தில் நல்லதொரு பிரஜையாக வரவேண்டும். என்று மேலும் உரையாற்றினார்.
இதில் வலயக்கல்வி அலுவலர் மற்றும் பாடசாலை அதிபர் சின்னத்தம்பி – பிரகடீஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர்.















