(மா.சசி)
ஹோட்டல் ஒன்றில் வாங்கி உட்கொண்ட உணவு விசமானதால் 12 பேர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ். இளங்கோ தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை காலை பாதிக்கப்பட்ட 12 பேரும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் 12 பேரும் தற்சமயம் தேறி வருவதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இவர்கள் சந்திவெளிப் பிரதேசத்திலுள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் இருந்து வாங்கிச் சாப்பிட்ட உணவே விசமானதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்திருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்த ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் உணவை வாங்கி உட்கொண்டவர்களே இந்த வித உபாதைக்கு உள்ளயிருக்கின்றார்கள் என்றும் அவர் சொன்னார்.
மேற்படி ஹோட்டலில் விற்கப்பட்ட உணவு நஞ்சானது தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஹோட்டலில் உள்ள உணவு மாதிரிகள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் தற்சமயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.













