மட்டக்களப்பில் வீட்டுத் தோட்டமொன்றிலிருந்த 16 முதலைக்குட்டிகள் மீட்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட அமிர்தகழி பிரதேச வீட்டுத் தோட்டமொன்றிலிருந்த குழியொன்றுக்குள் இருந்து 16 க்கும் மேற்பட்ட முதலைக்குட்டிள் மீட்கப்பட்டுள்ளன.

அமிர்தகழி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வீதியில் உள்ள மனோகரன் என்பவரின் காணியில் இருந்தே இந்த முதலைக்குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

தமது காணியை துப்புரவு செய்து கொண்டிருந்த போது முதலைக்குட்டி ஒன்றின் தலை தெரிவதைக் கண்டு அதனைத் தோண்டிய போது இறந்த நிலையில் ஒரு முதலைக்குட்டியும் 16 க்கும் மேற்பட்ட உயிருள்ள முதலைக் குட்டிகளும் 15க்கும் மேற்பட்ட முட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்துக்கு அறிவித்ததையடுத்து அங்கு வந்த திணைக்கள அதிகாரிகள் அவற்றினை எடுத்துச் சென்றுள்ளனர்.