மட்டக்களப்பு-கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலக வாணிவிழா - 2013

(பிரணி)
முப்பெருந் தேவிகளுக்கும் எடுக்கப்படும் நவராத்திரி விழாவின் ஏழாம் நாளும் சரஸ்வதி தேவிக்குரிய முதலாவது நாளுமான நேற்றய தினம். (11) வெள்ளிக்கிழமை சரஸ்வதி தேவிக்கு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் தலைமையில் ப+சையும், பஜனைகளும்; மிகவும் சிறப்பான முறையில் விழாநடைபெற்றது.



இந்நிகழ்வில் 2014ஆம் ஆண்டுக்கு பாடசாலை செல்ல இருக்கும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் நிதியுதவியுடன் பிரதேச செயலாளரின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இது கல்வித் தெய்வம் சரஸ்வதியைத் தியானித்து ஒவ்வொரு வருடமும் வழங்கி வைக்கப்பட வேண்டும் இது மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வாகும் என இந்நிகழ்வில் பிரதேச செயலாளரினால் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கிராம மக்களும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.