அண்மையில் ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழக்தால் ஆரையம்பதி பட்மின்ரன் உள்ளக அரங்கில் நடாத்தி முடிக்கப்பட்ட ஆண்களுக்கான திறந்த பட்மின்ரன் சுற்றுப்போட்டியில் சென்றவருடத்தைவிட கூடுதலான வீரர்கள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.இதன்போது நடைபெற்றுமுடிந்த ஒற்றையர்களிற்கான போட்டியில் அதே கழகத்தை சேர்ந்தவர்களான கே.சற்குணசீலன் 1ம் இடத்தையும், எஸ்.ரமணன் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டதோடு, இரட்டையர்களிற்கான போட்டியில் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த வெஞ்சா, கிசோக் ஜோடியினர் 1ம் இடத்தையும் , ஆரையம்பதி ஏசியன் கழகத்தை சேர்ந்த கே.சற்குணசீலன் , வரதராஜன் ஜோடியினர் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டிகள் யாவும் சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு எயார்டெல் நிறுவனத்தினரே பிரதான அணுசரனையாளர்களாக இருந்துள்ளனர்என்பதோடு அவர்களே இக்கழகத்தின் கடந்த கால சுற்றுப்போட்டிகளிற்கும் பிரதான அணுசரனையாளர்களாக இருந்துள்ளனர் என்பதை தமது உரையில் தெரிவித்துக்கொண்ட தலைவர் மேலும் இப்போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற ஒத்தாசை வழங்கிய கழக உறுப்பினர்கள், பங்குபற்றிய வீரர்கள் அனுசரனையாளர்களிற்கு தமது கழகம் சார்பான மிக்க நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.















