கைத்தொழில், கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் 32 ஊழியர்களுக்கு நியமனங்கள் வழங்கிவைப்பு

கௌரவ அமைச்சர் அல்ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் 32 ஊழியர்களுக்கு நியமனம் வழங்கள்
கைத்தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் 32 ஊழியர்களுக்கு அமைய தற்காலிக நிரந்தர நியமனம் இன்று (07.10.2013) மாலை 12.00 மணியளவில் சத்துருக் கொண்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை அமைச்சின் பிரதம கணக்காளர் சீ.ஏ.றகுனாதன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் அல்ஹாபிஸ் நசீர் அஹமட் (பொறுயியிளாலர்) விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, சிறு கைத்தொழில், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை (கி.மா) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் அமைச்சின் செயளாலர் கே.பத்மனாதன் அவர்கள் உற்பட அமைச்சின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். சுமார் 10 வருடங்களாக மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தற்காலிமாக தொழில்புரிந்த 32 ஊழியர்களுக்கு கௌரவ அமைச்சரின் கடும் முயற்சியினால் நிரந்தர நியமனம் இன்று வழங்கப்பட்டது.