"திவிநெகும" 5ம் கட்ட தேசிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு.

"வாழ்வின் எழுச்சி" தேசிய வேலைத்திட்டத்தின் ஐந்தாம் கட்ட மாவட்ட நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலகத்திலுள்ள -பேத்தாளை யில் இன்று காலை 10மணி 11நிமிட சுபநேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இவ் 5ம் கட்ட ஆரம்ப வைபவத்தின்போது திவிநெகும திட்டத்தின்கீழ் விவசாய உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.  மேலும் சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவின் "திரியபியச" வீடமைப்புத் திட்டத்தின்கீழ்  அமைக்கப்பட்ட வீடும் பயனாளிக்கு சி.சந்திரகாந்தன் அவர்களால் கையளிக்கப்பட்டது.

மேலும் திவிநெகும கைத்தொழில் வேலைத்திட்டத்தின்கீழ் திட்டத்தினை செயற்படுத்திக்கொண்டிருப்போருக்கு  அத் திட்டத்திற்கான பெயர்ப் பலகைகளும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடற் பணிப்பாளர்.கோறளைப்பற்று பிரதேச செயலாளர், சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர்,விவசாய பணிப்பாளர் உட்பட பல அரச அிதகாரிகள், அரச உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.