இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், அதிதிகளாக அமிர்தகழி கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை ரீ.எ.யூலியன், மெதஸ்த திருச்சபை குருவானவர் அருட்திரு.எஸ்.பஞ்சரெட்ணம், சித்தி விநாயகர் ஆலய குரு சிவஸ்ரீ.எஸ்.சிவபாதசுந்தர சர்மா, சித்தி விநாயகர் ஆலய தலைவர் ஞா.பரந்தாமன் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், அமிர்தகழியிலுள்ள ஆலயங்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் மாவட்ட மட்ட, பிரதேச மட்ட முதியோர் சங்க தலைவர், செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் முதியோர் சங்க உறுப்பினர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
- றோஜினி.ஹி












