மட்டு. மாவட்டத்தில் 96 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி திட்டங்கள்

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கிழக்கு மாகாண சுகா­தார அமைச்­சினால் 170 அபி­வி­ருத்தி திட்­டங்கள் 96 மில்­லியன் ரூபா செலவில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இவற்றுள் சுகா­தாரத் துறை­யுடன் தொடர்­பு­டைய 129 செயற்­திட்­டங்­களும் சிறுவர் மேம்­பாட்­டுடன் தொடர்­பு­டைய 19 திட்­டங்­களும் விளை­யாட்­டுத்­துறை அபி­வி­ருத்­திக்­கான 13 செயற்­திட்­டங்­களும் 5 சமூக சேவை திட்­டங்­களும் சுதே­சிய வைத்­தி­யத்­துறை சார்ந்த திட்­டங்­களும் கூட்­டு­றவு அபி­வி­ருத்­திக்­கான ஒரு செயற்­திட்­டமும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள மாவட்ட வைத்­தி­ய­சா­லைகள் மற்றும் தள வைத்­தி­ய­சா­லைகள் கிரா­மிய வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு தேவை­யான வளங்­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும் சுகா­தார அலு­வ­ல­கங்­களின் வச­தி­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் இத­னூ­டாக நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ருடம் சுகா­தார அமைச்­சி­னூ­டாக ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட நிதியின் மூலம் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் பெரும்­பா­லான வேலைத் திட்­டங்கள் நிறை­வ­டையும் நிலை­யி­லுள்­ள­தா­கவும் ஏனைய திட்டங்கள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.