ஐம்பதாவது அகவையில் இன்று நிற்கும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இன்றைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் அவர்களுக்கு தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் சார்பில் பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நாம் மகிழ்வடைகின்றோம் என தமிழரசுக்கட்சியின் களுவாஞ்சிக்குடி முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
சமாதான நீதிவானும், தமிழரசுக்கட்சி முக்கியஸ்தருமான பூபா.மதுரநாயகம் வெளியிட்டுள்ள வாழ்த்தில்,
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்.ஆனால் அனைவரது ஆண்டொன்றையும் நாம் நினைவு கூருவதில்லை. அதற்கான நேரமும் நமக்கில்லை. ஆனால் பொது வாழ்வில் ஈடுபட்ட குறிப்பாக தமிழ்த்தேசிய அரசியலில் தன்னை ஈடுபடுத்திய இன்றும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றவர்களை ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருடமும் நினைவு கூரக்கூடியவையே.
கிழக்கு மாகாணத்தின் கண்ணகி அம்மன் கோயில் கொண்ட முன்னைப்பழம் கிராமமான செட்டிபாளையம் கிராமத்தில் சண்முகம் தங்கராசா கோவிந்தன் -வேலுப்பிள்ளை சாந்தமணி தம்பதியினரின் குடும்பத்தில் ஐந்தாவது ஆண்மகனாக உதித்தவர் கோவிந்தன் கருணாகரம் அவர்கள். தனது ஆரம்பக் கல்வியினை செட்டிபாளையம் மகாவித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியினை மட்.புனித மைக்கல் கல்லூரியிலும் பயின்றார். மேலும் தனது பாடசாலைக் கல்வியினை வளப்படுத்த யாழ்நகர் சென்று கல்வி கற்ற வேளையில் தான் இவரது வாழ்விலும் திருப்புமுனை ஏற்பட்டது.
இவர் யாழ் மண்ணில் இருந்த காலம் தமிழ்த் தேசிய உணர்வு குறிப்பாக இளைஞர்களிடம் கருவாகி உருவாகி பிரசவ வேதனையில் இருந்த காலம். இப் பிரசவ வேதனையில் தமிழ்த் தேசியத்திற்காக தன்னையும் பிறப்பித்து அர்ப்பணித்து அப்போது தமிழ்த் தேசியத்திற்காக தீவிரமாக ஈடுபட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தில் இணைத்து இளம் போராளியாக தனது இன விடுதலைக்காக போராடி தனது இன உணர்வினை வெளிக்காட்டியவர் கோவிந்தன் கருணாகரம் அவர்கள்.
இலங்கை அரசியலின் விதியானது சிங்கள பௌத்த ஆதிக்கவாதிகளின் கைகளில் இருந்த நிலையில் அவர்களது அம்மண முகங்கள் தமிழர் தம் தாயகப்பிரதேசத்தில் அகோரமாகப் பார்வை கொண்ட நிலையில் அவர்களுக்க எதிராக தமது மொழி,இன,மத,கலாசார,வாழிட பிரதேச உரிமைகளை நிலை நிறுத்திட தம்மை தமது உயிரை அர்ப்பணித்தவர் இன்று ஐம்பது அகவை காணும் கோவிந்தன் கருணாகரம் அவர்கள்.
அக்காலத்தில் அரசு தனது திட்டமிட்ட தந்திரோபாயத்தின் மூலம் தமிழ் முஸ்லிம் மக்களிடையே உணர்வு பூர்வமான பிரச்சனைகளையும் இழப்புகளையும் இறப்புகளையும் ஏற்படுத்தி தனது இருப்பை உறுதி செய்த காலத்தில் இன சமூக மத சௌஜன்யத்திற்காக தன்னை ஈடுபடுத்தி அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் இன மத ரீதியிலான உறவினை கட்டியெழுப்ப இதய சுத்தியுடன் ஈடுபட்டவர். துமிழ் முஸ்லிம் இரு இனங்களும் பிரிந்திருந்தால் பகைத்திருந்தால் அது பேரினவாதிகளுக்கே இலாபம் என உணர்ந்து இன ஒற்றுமையை ஏற்படுத்த தன்னை ஈடுபடுத்தியவர்.
இக்காலத்தில் எழுந்த இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டினூடாக தமிழ்த் தேசிய இனத்தின் சமத்துவமான உரிமைகளை பெறவேண்டும் எனும் அடிப்படையில் எதிர்பாராத விதமாக கட்சியின் கட்டளைக்கிணங்க 1989ல் பாராளுமன்;ற தேர்தலில் குதித்து மட்டக்களப்ப மாவட்ட மக்களின் முதல் தெரிவாக அப்போதைய பாராளுமன்றத்தின் ஆகக்குறைந்த வயதுடைய பாராளுமன்ற உறுப்பினராகி மட்டக்களப்ப மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றில் பணியாற்றினார்.
கால தேச வர்த்தமான நிலைமைகளும் சிங்கள பேரினவாதிகளின் கொடுமைகளும் நிலவிய காலகட்டத்தில் தமிழ்த் தேசியத்தில் தீவிரமாக ஈடுபட்ட அக்கால அரசியல்வாதிகள் போல நாட்டில் இருக்க முடியாத சூழ்நிலையில் புலம்பெயரவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார். காலம் கனிய அரசியல் அஞ்ஞாதவாசம் துறந்து தமிழ்த்தேசிய அரசியலில் கிழக்கு மாகாண சபை மூலம் மீள்பிரவேசம் செய்து தனது அரசியல் வாழ்வின் ,பொது வாழ்வின் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார்.
காலத்தின் கட்டாயத்தின்பேரில் புலம்பெயர்ந்து பொருளாதார வளமுடன் தானும் தன் குடும்பமும் என்று வாழக்கூடிய அக்கரைச்சீமை வாழ்வினை உதறி தமிழ்த்தேசியத்திற்காக தன்னை ஈடுபடுத்தி ஒரு டயனமிக் பேசனாலிட்டியாக பரிணமித்திருப்பவர். இவர் தமிழ்த்தேசியத்திற்காக போராடப் புறப்பட்டவேளை பேரினவாதமும் சிங்கள இராணுவமும் தந்த பரிசுகளான விழிப்புண்ணை இன்றும் தன் தேகத்தில் இருத்தி ஒரு பறநாணூற்று தமிழ் மகனாக தமிழ்ப் பிரதேசத்தில் வலம் வந்துகொண்டிருப்பவர்.
ஒரு முட்டையிட்டு கொக்கரிக்கும் கோழி போன்ற அரசியல்வாதிகள் மத்தியில் அமைதி காக்கும் ஆமை போல தனது செயற்பாடுகளை அடக்கி வாசித்தாலும் அவரது கருவில் உருவான பதிவுகொண்ட தமிழ்த்தேசிய விடுதலை அமைதி காக்க விடவில்லை.
தமிழ்த்தேசியம் தமிழர் தம் சமத்துவ வாழ்வுரிமை பல்லின பல்மத இருமொழி இலங்கைக்குள் எம்மினம் எற்தவொரு இழிவுக்கும் உட்படக்கூடாது என்ற எண்ணக்கருவோடு இன்றும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்களது ஐம்பதாவது அகவை வாழ்த்துக்களை தெரிவிப்பதில் தமிழ்த்தேசியம் நேசிப்பவர்களுடன் நானும் இணைந்து கொள்வதில் இதயபூர்வமான மகிழ்வு கொள்கின்றேன்.
சமாதான நீதிவானும், தமிழரசுக்கட்சி முக்கியஸ்தருமான பூபா.மதுரநாயகம் வெளியிட்டுள்ள வாழ்த்தில்,ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்.ஆனால் அனைவரது ஆண்டொன்றையும் நாம் நினைவு கூருவதில்லை. அதற்கான நேரமும் நமக்கில்லை. ஆனால் பொது வாழ்வில் ஈடுபட்ட குறிப்பாக தமிழ்த்தேசிய அரசியலில் தன்னை ஈடுபடுத்திய இன்றும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றவர்களை ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருடமும் நினைவு கூரக்கூடியவையே.