வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு

நடனம் -
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு இன்று திங்கடகிழமை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் கு.மதிவண்ணன் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இதில் அதிதிகளாக  அதிபர் சீ.பாலசிங்கன் ,ஆசிரிய ஆலோசகர் கே.குமாரசாமி, பாவாணர் அக்கரைப்பாக்கியன் கலந்து கொண்டதுடன் ஆசிரியர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.