(மா.சசி)
2012 தேசிய வாசிப்பு மாத வேலைத் திட்டத்தில் மட்டக்களப்பு வின்சன் உயர்தர மகளீர் தேசிய பாடசாலைக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
ஓக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாக உள்ள நிலையில் அந்த மாதம் தேசிய பாடசாலைகளினால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் அடங்கிய அறிக்கையினை மாத முடிவில் கல்விச் சேவைகள் அமைச்சுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இந்த அறிக்கை ஆதாரங்களைக் கொண்டு கல்விச் சேவைகள் அமைச்சினால் தேசிய விருதுக்கான தேரிவு இடம்பெறும்.
இந் நிலையில் 2012 தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வின்சன் தேசிய பாடசாலையினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டத்திற்காக 2013 ஆம் ஆண்டு நடைபெறும் வாசிப்பு மாத விருது வழங்கும் நிகழ்வில் தேசிய விருதுக்க வின்சன் மகளீர் உயர்தரப் பாடசாலை தெரிவாகியுள்ளதாக கல்விச் சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இவ் விருது எதிர்வரும் 2013.10.29 ஆம் திகதி கொழும்பில் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கா தலைமையில் இடம்பெறவுள்ள விருது வழங்கம் நிகழ்வின் போது வழங்கப்படவுள்ளது.
2012 தேசிய வாசிப்பு மாத வேலைத் திட்டத்தில் மட்டக்களப்பு வின்சன் உயர்தர மகளீர் தேசிய பாடசாலைக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
ஓக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாக உள்ள நிலையில் அந்த மாதம் தேசிய பாடசாலைகளினால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் அடங்கிய அறிக்கையினை மாத முடிவில் கல்விச் சேவைகள் அமைச்சுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.இந்த அறிக்கை ஆதாரங்களைக் கொண்டு கல்விச் சேவைகள் அமைச்சினால் தேசிய விருதுக்கான தேரிவு இடம்பெறும்.