இந் நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. இதன்போது, மாணவர்களினால் அனைத்து ஆசிரியர்களுக்கும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் கடந்த வருடம் க.பொ.த சா.தரம் விஞ்ஞானப் பாடத்தில் கோட்ட மட்டத்திலும்,வலய மட்டத்திலும் 100சதவீதம் சிறந்த பெறுபேற்றைப் பெறுவதற்கு வழிகாட்டியாக இருந்த விஞ்ஞானப் பாட ஆசிரியர் என்.சிறிகரன் அவர்களுக்கும் கணிதப் பாடத்தில் சிறந்த பெறுபேற்றினைப் பெற வழிகாட்டிய ஆசிரியர் இரா.சிவகுமார் அவர்களுக்கும் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவி ஒருவரை சித்திபெறச் செய்தமைக்காக ஆசிரியர் ஆர்.சதீஸ் அவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் என்.ஆனந்தன் அவர்களால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.












