மட்/ககு/வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் உலக ஆசிரிய தினத்தை முன்னிட்டு 1வது தடவையாக இரத்ததானம் வழங்கும் வைபவம் அதிபர். க.தவராஜா தலைமையில் இன்று 07ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
2013ல் சிறந்த ஆசிரியர் தெரிவிற்கான ஜனாதிபதி "பிரபா பிரதீபா" விருது மட்/ககு/வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் 3 ஆசிரியர் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ் விருது, பவளத்துரை மதியழகன்,திருமதி.மங்களா உமாபதிசிவம், திருமதி.வினோஜினி சந்திரமோகன் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆசிரியர் நலன் புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட் இரத்ததான நிகழ்வு பாடு மீன் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் நடைபெற்றுள்ளது. கல்குடா கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.T.இளங்கோ,கோ.பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளர் N.குணலிங்கம் ,மட்டக்களப் பு போதனா வைத்தியசாலை வைத்தியர் திருமதி.ஜலீல் அவர்களுடன் இரத்தவங்கியில் சேவையாற்றும் தாதிய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தி வைத்துள்ளனர். மற்றும் 33குருதிக் கொடையாளர் பங்குபற்றி இரத்ததானம் செய்துள்ளனர்.












